• Breaking News

    வழிகெட்ட கொள்கையா ஸலஃபி?


     வழிகெட்ட கொள்கையா ஸலஃபி?

    இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தனது சமுதாயத்தைப் பற்றி செய்த முன்னறிவிப்பு.

    யூத, கிருத்தவ சமூகங்கள் பல பிரிவினராக பிரிந்து சிதறிவிட்டனர்அப்படிப்பட்ட நிலை எனக்குப் பின்னால் எனது சமூகத்திலும் உருவாகிவிடும். அந்த நேரத்தில் ஒரேஒரு கூட்டம் மட்டுமே சரியான கொள்கையில் நிலைத் திருப்பார்கள் என்று அறிவித்துள்ளார்கள். (ஹதீஸ் கருத்து) நூல் : திர்மிதி, இப்னுமாஜா

    என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் சத்திய கொள்கையில் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள், எந்த சதிமோசக்காரர்களின் தீங்கும் அவர்களை ஒன்றும் செய்துவிடாது. இந்த நிலை அழிவு நாள் வரை நீடிக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்

    அந்த சத்தியக் கூட்டம் நாங்கள் தான் என ஒவ்வொரு கூட்டமும் வாதாடமல் இருப்பதற்காக அந்த கூட்டத்திற்கான அடையாளத்தையும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    நானும் எனது தோழர்களும் இன்றைய தினம் எந்த கொள்கையில் இருக்கின்றோமோ அதே கொள்கையில் இருக்கின்ற கூட்டம் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள்.

    நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போன்று, அவர்களுக்குப் பின்னால் இந்த சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரிந்தனர். இறைக் கொள்கையில் தங்கள் அறிவைப் பயன்படுத்தி, புது புது, வியாக்கியானங்களை கொடுக்க ஆரம்பித்தார்கள்.ஒவ்வொரு சாராரும் அவர்கள் கொண்டுள்ள கொள்கைத் தான் சரியானது என்று வாதிட்டனர். குர்ஆன் வசனங்களை தங்களுக்கு சாதகமாக வளைத்து திரித்துக் கூறினார்கள்.

    இப்படிப் பட்ட குழப்பமான நிலையில் நானும் என்னுடையதோழர்களும் எந்த கொள்கையில் இருக்கின்றோமோ அதே கொள்கையில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே நேரான வழியில் இருக்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

    எனவே எந்த கால கட்டத்திலும் அந்த சத்திய நபித்தோழர்களான ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள், (முன் சென்ற சத்திய விசுவாசிகள்) ஏற்றிருந்த கொள்கை தானா இது? என்று கேட்டு தெரிய முற்படுவோமானால் சத்தியக் கூட்டத்தை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். சத்திய கொள்கைவாதிகளை அசத்திய கொள்கைவாதிகளிட மிருந்து பிரித்தறிவதற்கே ஸலஃப்என்ற சொல் பயன் படுத்தப்படுகிறது.

    சத்திய கொள்கை வாதிகளுக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறிய அடையாளத்தை தெரிய வேண்டிய ஒரு கட்டாயத்தில் இன்று இஸ்லாமிய சமுதாயம் இருக்கிறது.

    அல்லாஹ் எங்கே இருக்கிறான்? அர்ஷில் இருக்கிறானா, எங்கும் இருக்கிறானா? அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருவானா வரமாட்டானா? பெரும் பாவம் செய்தவன் சொர்க்கம் செல்ல முடியுமா செல்ல முடியாதா? சூனியம்,கண்திருஷ்டி உண்டா?இல்லையா?
    இதுபோன்ற விஷயங்களில் பல்வேறு கொள்கையுடையவர்கள் முஸ்லிம்கள் என்ற பெயரில் இருப்பதை இன்றும் நாம் பார்த்து வருகிறோம்.

    இந்த நிலையில் யார் சொல்வது சரியான கொள்கை? என்பதைத் தெரிய வேண்டிய கட்டாயத்தில்நாம் இருக்கின்றோம். எனவே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல், பிரகாரம் நபித்தோழர்களான ஸலஃபுஸ் ஸாலிஹீன்களும் அவர்கள் நம்பி வந்த கொள்கையை யாரெல்லாம் நம்புகிறார்களோ அதுவே சரியான கொள்கை, அதுவே சரியான வழி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    சத்திய சீலர்கள் என நபி(ஸல்) அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அந்த நபித்தோழர்களின் கொள்கை வழி கெட்ட கொள்கையானால் உலகத்தில் வேறுயாருடைய கொள்கை தான் சரியானது?

     

    No comments

    Post Top Ad

    Thuya Islam

    Post Bottom Ad